Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு.. திருச்சி க்ரைம்

பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலை பால் செமினரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தீபன் (24). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வருகிறார். நேற்று திருச்சி – திண்டுக்கல் ரோடு கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரே மயங்கி விழுந்தார். இவரை மீட்டு நண்பர்கள் கருமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிந்து, உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

லால்குடியைச் சேர்ந்தவர் மயங்கி சாவு

திருச்சி ஹீபர் ரோட்டில் நீதிமன்றம் அருகே மாவட்ட தீயணைப்பு நிலையம் உள்ளது.இதன் எதிரில்உள்ள டிபன் கடை முன்பு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது.இதுகுறித்து கோப அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி கௌதம் பாபு அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து இவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒருவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி மாவட்டம் லால்குடி வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சரவணன் என்பவர் திருச்சி கருமண்டபம் பால் பண்ணை ரோடு மதுக்கடை அருகில் மயங்கி விழுந்தார்.உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அவர் சிகிச்சை பல நின்று இறந்துவிட்டார்.இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!