Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், சபலென்கா 4வது சுற்றுக்கு தகுதி

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ்,சபலென்கா 4வது சுற்றுக்கு தகுதி

நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்றில் நம்பர் 1 பெலாரசின் 28 வயது அரினா சபலென்கா, 6-3,6-4 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார். 3வது ரேங்க் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 1-6,6-4,6-3 என கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டசையும், உக்ரைனின் மார்தா கோஸ்டியுக் 6-3,6-2 என ரஷ்யாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவையும், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா 6-3,6-3 என இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினியையும், அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் 62,6-7,6-3 என ரஷ்யாவின் டயானா ஷ்னைடரையும் வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-2,6-7,6-2 என அமெரிக்காவின் ஆன் லியையும், அமெரிக்காவின் எம்மா நவாரோ, 6-3,7-5 என செக்குடியரசின் கரோலினா முசோவாவையும் வீழ்த்தினர்.

ஆடவர் ஒற்றையரில் நம்பர் 2 ஸ்பெயினின் அல்காரஸ், 6.3,6-4,6-1 என சீனாவின் வூ யிபிங்வை வீழ்த்தி 4வதுசுற்றுக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாஃபோ, ரஷ்யாவின் மெத்வதேவ், கிரீஸ் நாட்டின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோரும் 3வதுசுற்றில் வெற்றி பெற்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் செரீனா, வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

கஞ்சா புகை நாற்றம்; சபலென்கா புகார்: மகளிர் ஒற்றையர் 3வது சுற்றில் முதல் செட்டில் சபலென்கா சர்வ் செய்ய முயன்றபோது, கஞ்சா புகை நாற்றத்தால் திணறினார். உடனடியாக நடுவரிடம் சென்று, ”யாரோ கஞ்சா புகைக்கிறார்கள், தயவுசெய்து அதை நிறுத்த முடியுமா?, வாடை மிகவும் கடுமையாக உள்ளது\” என முறையிட்டார். ஆனால் மைதானத்தில் யாரும் கஞ்சா புகைக்கவில்லை. மைதானத்திற்கு அருகே பூங்காவில் இருந்து கஞ்சா வாடை வருவதாக தெரிவிக்கப்பட்டது. வெற்றிக்கு பின் சபலென்கா இதுபற்றி கூறுகையில், ஆட்டம் வேகமாக சென்றதால், ரசிகர்கள் தனது ஆட்டங்களை இன்னும் அதிகமாக ரசிப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்களோ என சிரித்துக்கொண்டே கூறினார்.

error: Content is protected !!