Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்… பொதுமக்களிடம் கலெக்டர் வேண்டுகோள்

அதிகரித்து வரும் வெய்யிலின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, கிடைக்கக்கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த அரியலூர் ஆட்சியர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்துள்ள சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் மிருணாளினி IAS பங்கேற்று, 106 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி பின்னர் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய ஆட்சியர் மிருணாளினி…

அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக, இந்த மக்கள் தொடர்பு முகாமை ஏற்பாடு செய்து உங்களது ஊருக்கே நாங்கள் வந்துள்ளோம்.

இந்த ஊருக்கு வருகின்ற வழியில் பார்த்தபோது மற்ற ஊரைக் காட்டிலும் இங்கு விவசாயம் சற்று செழிப்பாகவே இருந்தது. இருந்தபோதிலும் தற்போது மாறிவரும் கால நிலைக்கு ஏற்ப உங்களுக்கு கிடைக்கக்கூடிய குடிநீர் ஆனாலும், மற்ற தண்ணீர் என்றாலும் அதனை சீக்கிரமாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.

வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ள இந்த சூழலில் நமக்கு கிடைக்கக்கூடிய குடிநீருக்கான ஆதாரத்தை, நாம்தான் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சாலைகளில் செல்லும் போது ஒரு சில இடங்களில் குடிநீர் குழாயில் இருந்து பைப் வழியாக கால்நடைகளை குளிப்பாட்டுகின்றனர். அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். மாறாக தண்ணீரை பிடித்து வைத்து பின்னர் அதனைப் பயன்படுத்த பழக வேண்டும்.

குடிநீர் குழாயை திறந்ததும் தண்ணீர் வருவது என்பது அரசின் வெற்றிகரமான திட்டம். ஆனால் அதை சேமிப்பது என்பது நமது கையில் தான் உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் மிருணாளினி IAS வேண்டுகோள் விடுத்து பேசினார்.

error: Content is protected !!