Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து முதலில் கோவில் காளை  வாடிவாசல் வழியாக விடப்பட்டது.  அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் விடப்பட்டன.   சீறி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு  அடக்கினர். இந்த போட்டியில் பங்கேற்க  750 காளைகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டன.275 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!