Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்கள் எனக்காக பேசுகிறார்கள்….. கங்கை அமரனுக்கு…. வைரமுத்து பதிலடி

கவிஞர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று  ஒரு விழாவில் பேசினார்.  சில நேரங்களில் இசையைவிட மொழி பெரியதாக இருக்கும் என்று வைரமுத்து பேசியிருந்தார். வைரமுத்துவின் இந்த பேச்சு இளையராஜாவை தாக்கி பேசுவது போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

இளையராஜா குறித்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என்று இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு வீடியோவில் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த மிரட்டலுக்கு  வைரமுத்து  நேரடியாக  இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில்  வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இன்று கங்கை அமரனின் மிரட்டலுக்கு  தனக்கே உரிய பாணியில் கவிதை நடையில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

குயில் கூவத் தொடங்கிவிட்டால்

காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும்

புயல் வீசத் தொடங்கிவிட்டால்

ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும்

வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால்

நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்

மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால்

கவிஞன் தன் குரலைத்

தணித்துக்கொள்ள வேண்டும்

அதுதான் நடந்து கொண்டிருக்கிறது

இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!