Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செஞ்சி அருகே ₹5,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன், தனது பாட்டி கொடுத்த சொத்தை பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக பாடிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) சிங்காரவடிவேல் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரங்கநாதன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை ரங்கநாதன் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிங்காரவடிவேலை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!