Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி விஏஓ கொலையில்….. முக்கிய குற்றவாளி கைது

தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் தாலுகா   முறப்பநாடு கோவில்பத்து கிராம  நிர்வாக அதிகாரியாக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 பேர் புகுந்து கிராம நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  கிராம அதிகாரி லூர்துபிரான்சிஸ்  சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாணை நடத்தினர்.

இதில் கொலையில் ஈடுபட்ட ராமசுப்பிரமணியன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான மாரிமுத்துவை  பிடிக்க எஸ்.பி. தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லையில் பதுங்கி இருந்த மாரிமுத்துவை  இன்று காலை போலீசார்  கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!