Skip to content
Home » வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு…

வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு…

  • by Senthil

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உள்ளனர்.  முன்னதாக, பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு இன்று  காலை 11 மணிக்கு வந்தடைந்தார். அவரை கேரள ஆளுநரும், முதல்வரும் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சூரல்மலா பகுதியில் மேல் ஆய்வு நடந்து வருகிறது. மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியும் அவர்களுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து  நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து பேசினார். நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். தற்போதைய மீட்புப் பணி நிலவரம் குறித்து ராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

செய்யப்பட்டு உள்ளன. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.  கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!