காவிரி ஆற்றில் முதலை கிடைப்பதாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
டெல்டா பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மழை மற்றும் தடுப்பணை காரணமாக குறைந்த அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
அதன்படி கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தேய்ங்க கிடக்கும் குறைந்த நீரில் முதலை கிடப்பதாக சமூக வலைதளத்தில் நேற்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை கண்டு காவிரி கரையோர மக்கள் மற்றும் காவிரி ஆற்றில் தர்ப்பணம் மற்றும் சடங்குகள் செய்ய வரும் பக்தர்களும் கடும் பீதி அடைந்துள்ளனர்.
