தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்(த.வெ.க.) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்க்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தவெக தலைவர் விஜய்க்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்,..
வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, ’happy birthday’ சொல்வதைப்போல,
விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது!
விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால்,ஜெயம் திரு விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்கு, தமிழக மக்கள் எண்ணிக்கையில் 108 இடங்கள் கொடுத்ததோடு, தங்களின் இதயம் என்கிற இடத்தையே சிம்மாசனமாக்கி அதில் முதல்வராக அமர, திரு விஜய் அவர்களுக்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள real HERO -வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம்!
