Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காயிதே மில்லத் துயிலிடத்தில் விஜய் மரியாதை

காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் இன்று(05-06-2026) காலை 9 மணியளவில் காயிதே மில்லத் அடக்கதலம் அமைந்துள்ள சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்டு விழாவில் கலந்து கொள்வதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

அதன்படி இன்றைய தினம் திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். அவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் போர்வை அணிவித்து முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஷாஜகான், வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!