வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், அந்த தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என்றும், விஜய் சேதுபதி தொடர்ந்து இப்படத்தில் நடித்து வருகிறார் என்றும் படக்குழு தரப்பிலிருந்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
