Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை….108 பால்காவடியுடன் பக்தர்கள் விராலிமலைக்கு ஊர்வலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள காவேரி நதிக்கரையில் இருந்து விராலிமலை ஸ்ரீ ஆறுமுக பெருமாள் ஆலய திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சன்மார் தவயோகி ஸ்ரீ வெள்ளம்மாள் மன்றம் சார்பில் 52 ம் ஆண்டாக 108 காவடி பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் முக்கிய நிகழ்வாக காவேரி நதிக்கரையில் இருந்து 108 காவடி மற்றும் தீர்த்த குடம் பால்குடம் எடுத்து காவேரி நதிக்கரையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காவடிகளுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு பக்தர்கள் காவேரி ஆற்றில் இருந்து குளித்தலையில் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க விராலிமலைக்கு வாகனம் மூலம் பக்தர்கள் காவடி சுமந்தபடி சென்றனர் இதில் வைரப் பெருமாள் பட்டி, திம்மம்பட்டி, சிவாயம் மேலப்பட்டி, அய்யர்மலை, கணிக்கம்பட்டி, புனவாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!