Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் புதிய நீச்சல் குளத்தை VSB திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய தளபதியினுடைய வழிகாட்டுதலின்படி, கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கரூர் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், மாணவச் செல்வங்கள் பயன்பெறக்கூடிய வகையில் 2 கோடி 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிகச்சிறப்பாக, அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளத்தினுடைய பணிகள் முடிக்கப்பட்டு, இன்று பொதுமக்களுடைய பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துள்ளோம்.
​இந்த நீச்சல் குளத்தைப் பொறுத்தவரை, மாணவர்கள் நம்முடைய கரூர் மாவட்டத்திலிருந்து பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக மிகச்சிறப்பாக இது வடிவமைக்கப்பட்டு, அரசினுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இது திட்டமிடப்பட்டு மிகச்சிறப்பாக செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.
​அதேபோல, இன்றைய சந்திப்பு என்பது மிக முக்கியமாக 2021-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மாண்புமிகு தளபதி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். மாண்புமிகு முதலமைச்சராக தளபதி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், கரூர் நகராட்சி

மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதோடு, மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு சாலைகள் புதிதாக அமைக்க வேண்டிய சூழலும், ஏற்கனவே மண் சாலைகளாக இருந்த சாலைகளையெல்லாம் கணக்கெடுத்து புதிய தார் சாலைகளாக அமைக்க வேண்டிய பணிகளும், அதேபோல சாக்கடை வசதிகள், தெருவிளக்குகள், கட்டிடப் பணிகள் என பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடம் முன்வைத்தார்கள்.
​குறிப்பாகப் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்த புதிய பேருந்து நிலையம் புறநகர் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் களத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த பொழுது, ஆட்சி அமைந்தவுடன் கரூர் மாநகராட்சி பகுதியில் குறிப்பாகப் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அந்தப் பணிகள் நிறைவு பெற்று மாண்புமிகு துணை முதலமைச்சருடைய திருக்கரங்களால் புதிய பேருந்து நிலையம் பொதுமக்களுடைய பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்கள்.
​இப்படித் தொடர்ச்சியாகச் சாலை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் என கரூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை ஏறத்தாழ 418 கோடி ரூபாய் அளவிற்கு இந்த ஐந்தாண்டுகளில் சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், தெருவிளக்குகள், கட்டிடப் பணிகள் என அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளெல்லாம் மிகச்சிறப்பாக நிறைவு பெற்று பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்.
​புதிதாகப் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அமைப்பதற்காக 245 கோடி ரூபாய் நிதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, இன்னும் இரண்டொரு தினங்களில் அது இறுதி செய்யப்பட்டு அந்தப் புதிய காவிரி குடிநீர் திட்டப் பணிகளும் தொடங்க இருக்கின்றோம். அதேபோல கரூர் மாநகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்குப் புதிய பாதாளச் சாக்கடை அமைக்கக்கூடிய பணிகளைக் கொண்டு வருவோம் என்ற உறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில் 485 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இப்பொழுது ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. அது இறுதி செய்தவுடன் அந்தப் பணிகளும் நாங்கள் தொடங்க இருக்கின்றோம்.
​ஆக, கரூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை இந்த ஐந்தாண்டுகளில் 1,148 கோடி ரூபாய் அளவிற்கு, ஏறத்தாழ 1,150 கோடி ரூபாய் அளவிற்கான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் நிதிகளைக் கொடுத்து பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
​சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஒரு மாநகராட்சி பகுதியில், குறிப்பாக நம்முடைய கரூர் மாநகராட்சி பகுதிகளில் இந்த அளவிற்கு நிதிகள் வந்த வரலாறு இல்லை. இந்த ஐந்தாண்டுகளில் மாண்புமிகு முதலமைச்சர் கரூர் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, கேட்ட திட்டங்கள் அத்தனைக்கும் நிதிகளைக் கொடுத்து, அந்தத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அந்தப் பணிகளெல்லாம் இறுதி செய்யப்பட்டு முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களுடைய பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பை மாண்புமிகு முதலமைச்சர் உருவாக்கித் தந்தார்கள்.
​எனவே, இன்று பொதுவாக என்னைப் பொறுத்தவரை இந்த கரூர் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக ஒரு மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாளை நான் கருதுகின்றேன். மக்களிடத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, மக்களிடத்தில் சொல்லாத கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்றி இருக்கின்றோம். ​கரூர் காமராஜ் மார்க்கெட் வணிக வளாகமாக இருக்கட்டும், ​வெங்கம்மேடு மீன் மார்க்கெட்டாக இருக்கட்டும்,
​மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் பூங்காவாக இருக்கட்டும்,
​இப்படித் தொடர்ச்சியான பணிகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டு, பி.எம்.எச் (PMH) பள்ளி அருகில் அந்தப் பில்டிங்கில் (Building) பார்த்தீர்கள் என்றால் ஒரு அறிவுசார் மையம், இப்பொழுது நம்முடைய நகராட்சி மேல்நிலைப் பள்ளி அதே வளாகத்தில் முதலமைச்சருடைய படைப்பகம் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் புதிய நூலகம் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நூலகம் என வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை, குறிப்பாகக் காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடிய வரலாறு படைக்கக்கூடிய திட்டங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் நிதிகளைக் கொடுத்து, இந்த ஐந்தாண்டுகளில் 1,148 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சிப் பணிகள் நடந்தது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. ஆக, இன்னும் தேவைகள் இருந்தாலும் கூட அந்த நிதிகளைத் தருவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் தயாராக இருக்கின்றார்.

error: Content is protected !!