Skip to content

முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

குளித்தலை அருகே மேட்டு மகாதானப்புரத்தில் முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் ஊராட்சி மேட்டு மகாதானபுரத்தில் முருங்கை மதிப்பு சேர்க்கை செயலக மைய திறப்பு விழா நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செயலாக்க மையத்தினை பார்வையிட்ட அவர் முருங்கை மதிப்பு சேர்க்கை பொருள்கள் உற்பத்தி தயாரிப்பினையும் துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் கரூர் மாவட்டத்தில் தொழில் துறையில் வரும் 2030-க்குள் 50,000 கோடி வருமான இலக்கு கொண்டு பல்வேறு தொழில்களை ஊக்குவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் முருங்கைக்கீரை பெயர் பெற்ற அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்

குளிர்ச்சிலை உள்ளிட்ட பகுதிகளில் முருங்கைக்கு உரிய விலை இல்லை என்று விவசாயிகள் கவலைப்பட்டு வந்துள்ளனர். அவர்களின் கவலையை போக்கும் விதமாக முருங்கைக்கு உற்பத்தியை அதிகரித்து மதிப்பு சேர்க்கை செயலாக மையத்தினை உருவாக்கிடவும், கரூர் மாவட்டத்தில் முருங்கைக்கு தொழில் உற்பத்தி பூங்காவினை உருவாக்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்பேரில் முருங்கை முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக மையத்தினை கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மேட்டு மகாதானபுரத்தில் துவங்கி உள்ளதாகவும், முருங்கை

உற்பத்திக்கான அரவக்குறிச்சி பகுதியில் 6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் துவங்கப்பட உள்ளது தமிழ்நாட்டில் முதல் முறையாக 25 தொழில் முனைவோர்கள் ஒரு டிரஸ்ட்டாக அமைத்து அரசின் மானிய முதலீடுகள் மட்டுமில்லாமல் தங்களுடைய சொந்த முதலீடுகளையும் இதில் செய்துள்ளதாகவும், கரூர் மாவட்டத்தில் தொழில்துறையில் வரும் 2030க்குள் 50 ஆயிரம் கோடி வருமான இலக்கு என்ற திட்டத்தில் முருங்கை உற்பத்தியும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், முருங்கை மதிப்பு கூட்டுப் பொருட்களை அரசு பள்ளிகளில் காலை உணவில் குழந்தைகளுக்கு சேர்ப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஒப்புதல் பெற்று அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், கரூர் மாவட்டம் முழுவதும் முருங்கை உற்பத்திக்கென செயலாக்க மையங்கள் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!