Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாஷிங் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், மணிகண்டபுரம், 4வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண கோயல், 61; தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது, மின் கசிவால், வாஷிங் மெஷின்

திடீரென தீப்பிடித்து எரிந்து வீட்டில் கரும்புகை சூழ்ந்தது. அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மின்சாரத்தை துண்டித்து, அவரை பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து வந்த அம்பத்துார் எஸ்டேட் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை கட்டுகுள் கொண்டு வந்தனர்.அதற்கு வாஷிங் மெஷின் முழுதும் தீக்கிரையானது. தீவிபத்து குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்

error: Content is protected !!