உங்கள் குடும்பத்தின் ஒருவனாக, உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்கு எண்ணற்ற பணிகளை செய்து தருவேன்,குடகனாறு ஆற்றில் இருந்து வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஆட்சி அமைந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதி அளித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜா, உதயசூரியன் சின்னத்திற்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனம் மற்றும் பிரச்சார வாகனத்தில் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை ஊராட்சியில் உள்ள சின்னதாளப்பட்டி, பச்சப்பட்டி, வடக்கு மேட்டுப்பட்டி, வெங்கடாபுரம், வெள்ளியணை கடைவீதி உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
வேட்பாளரை கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பொதுமக்கள் பூக்கள் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக வேட்பாளர் ராஜா பிரச்சார வாகனத்தில் பேசுகையில்:உங்கள் கு

டும்பத்தின் ஒருவனாக, உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்கு எண்ணற்ற பணிகளை செய்து தருவேன் என்று உறுதி அளிக்கிறேன், சாலைப் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இரண்டு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்படும், குடகனாறு ஆற்றில் இருந்து வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஆட்சி அமைந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
