Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நோட்டா அமைப்பு எங்களுக்கு தேவையில்லை… டிரம்ப்

ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், விரைவில் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காமல் வைத்து இருந்த ஈரான், லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, ஜலசந்தி வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் எங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டு, நேட்டோவிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்கள் உதவி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இப்போது எனக்கு உங்கள் உதவி உண்மையிலேயே தேவையில்லை என்று அவர்களிடம் கூறினேன்.
ஏனென்றால் எங்களுக்குத் தேவைப்பட்டபோது, அவர்கள் முற்றிலும் பயனற்றவர்களாக இருந்தார்கள். ஆனால் உண்மையில், எங்களுக்கு அவர்கள் தேவைப்படவே இல்லை. அவர்களுக்குத்தான் நாங்கள் தேவைப்பட்டோம் என்று கூறினார்.

இதனிடையே டிரம்ப் வெளியிட்ட பதிவு ஒன்றில், ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை சரியாகிவிட்டது. எங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று நேட்டோவிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்களுடைய கப்பங்களில் எண்ணெய்யை ஏற்றுவதற்காக வரவில்லை என்றால், விலகி இருக்குமாறு கூறினேன். ஏனென்றால், எங்களுக்குத் தேவைப்பட்டபோது அவர்கள் பயனற்றவர்களாகவும் ஒரு காகிதப் புளியாகவும் இருந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!