Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாம விரும்புறதை தேடணும்- நடிகர் அஜித்தின் புதிய விளம்பரம்

நாமவிரும்புறதை தேடணும்-அதை நேர்மையா-அஜித்தின் புதியவிளம்பரம்

நடிகர் அஜித்குமார் தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளமப்ரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 


தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். சிறுவயது முதலே கார் மற்றும் பைக் பந்தயங்கள் மீது தீராத காதல் கொண்ட அஜித்குமார் சொந்தமாக அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார். வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ள அஜித்தின் கார் ரேஸிங் அணிக்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படும் நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி கேம்பா குளிர்பான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

பெப்சி, கோலா வருகைக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த கேம்பா நிறுவனத்தை கடந்தாண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இதை மீண்டும் புத்துயிர் பெற வைக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், கேம்பாவை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஜித்குமார் கேம்பா குளிர்பானத்திற்காக தற்போது விளம்பரத்தில் நடித்துள்ளார். கேம்பா குளிர்பானத்தை கையில் ஏந்தியவாறு உள்ள அஜித்தின் புகைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.


இந்நிலையில், நடிகர் அஜித் குமார் ‘கம்பா எனர்ஜி’ (Campa Energy) விளம்பரத்தைத் தொடர்ந்து, தற்போது நோவா (Nova) எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் அஜித்தின் புதிய மற்றும் ஸ்டைலான தோற்றம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.இதன் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

error: Content is protected !!