முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் , எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி தனது X-பக்கத்தில் வௌியிட்டுள்ள பதிவு..
கழக உடன்பிறப்புகளுக்கு எனதன்பு வணக்கங்கள் …
களப்பணியே திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மையான பணி. மக்களுக்காக என்றுமே உழைத்திடும் ஒரே இயக்கம் நமது திமுக மட்டுமே. நமது இயக்கம் சந்திக்காத தோல்வியும் இல்லை.. நமது இயக்கம் சந்திக்காத வெற்றியும் இல்லை.. பேரறிஞர் அண்ணா, தமிழினத்தின் தலைவர் கலைஞர், கழக தலைவர் தளபதி, இளந்தலைவர் ஆகியோரது கொள்கைகளின் வழியில் பயணித்து, தமிழினத்தையும், தமிழ்நாட்டையும் மீட்க வேண்டிய தலையாய கடமை நமக்கு இருக்கிறது.
கழக கட்டமைப்பை வலுப்படுத்த தலைவர் மற்றும் இளந்தலைவர் முன்னெடுக்கின்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அப்பணிகளை விரைந்து முடித்திடுவோம்.
இன்றைய இளைஞர்கள் அதிகம் களமாடும் தளமாக “ சமூகவலைதளம் “ உள்ளது. டீக்கடை தோறும் ஆரம்பித்த நமது எளிய அரசியல் உரையாடல் இனி சமூகவலைதளத்திலும் பரவட்டும். சமூகவலைதள கணக்குகளை தொடங்கி, நமது கருத்துகளையும், தங்கள் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள், தலைவர் கலைஞர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள், வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசுவோம்.
“ தினம் ஒரு வரலாறு “ என உங்களது சமூகவலைதளம் நமது கொள்கைகளை பறைச்சாற்றும் தளங்களாக மாறட்டும். அனைத்து வகையிலும் கழகத்திற்காக களமாடுவோம்.
என்னொடு கைகோர்த்து, உங்கள் பகுதியில் உள்ள இளையோர்கள், மகளிர்கள், பொதுமக்களோடு இணைந்து, நமது கொள்கைகளை “ தினம் ஒரு வரலாறு “ என்ற தலைப்பில் கொண்டு செல்வோம்.!
மீண்டு வருவோம்… மீண்டும் வருவோம்..!! என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
