Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிணறு மண் சரிவு: தஞ்சையில் தொழிலாளி பலி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கிணறு வெட்ட மண் தோண்டும்போது மண் சரிந்ததால் தொழிலாளி ஒருவர் பலி ஆபத்தான நிலையில் ஒருவர் மீட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கீழ தூண்டில் விநாயகம் பேட்டை பகுதியில் பன்னீர்செல்வம் என்பவரின் வீட்டின் அருகில் கிணறு வெட்டுவதற்காக இன்று நரசிங்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலு (48), மருதவாணன் (40) கண்ணன் (60) சேகர் (61) ஆகிய நான்கு பேரும் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் பத்து அடி ஆழத்தில் மண் தோண்டி கொண்டிருக்கும்போது உள்ளே வேலை செய்த பாலு மற்றும் மருதவாணன் இருவர் மீதும் மண் சரிந்து விழுந்ததில் உள்ளே சிக்கிக் கொண்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்கு முயற்சியில் ஈடுபட்டு மருதவாணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு தொழிலாளியான பாலு மீது மண் சரிந்ததில் முழுவதுமாக உள்ளே மாட்டிக் கொண்டார் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஜேசிபி எந்திரம் கொண்டு மூடப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்தி பாலுவை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் பாலுவின் உடல் மீட்கப்பட்டது. கண்ணன் சேகர் இருவரும் மேலே நின்று கொண்டிருந்ததால் அவர்கள் காயம் இன்றி தப்பினர். மண் தோண்டும் வேலைக்கு வந்து தொழிலாளி உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் தாசில்தார் சாந்தமீனா திருவடைமருதூர் காவல் ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!