கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இதன்தொடர்ச்சியாக மின்வாரிய அலுவலகம் வௌியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் சமீபத்திய ஒதுக்கீடுமற்றும் ஒ்பபுதல் வழங்கியதில் வௌிப்படை தன்மை இல்லாமல் அவசரகதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தலைமைத நிதி கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் தலைமை பொறியாளர் (மரபு சாரா எரிசக்தி) ஆகியோர் சஸ் பெண்ட் செய்யப்படுவதாகவும், ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) அவர்களின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு மின்சாரத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் தொடர்பான அனைத்து பெரிய டெண்டர்களும் மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் ஒப்புதல் பெற்றே நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்தநிலையில் குறிப்பிட்ட சில அதிகாரிகளை குறிவைத்து அமைச்சர் நடவடிக்கை எடுப்பது எப்படி? தற்போதையை மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் இந்த பொறுப்பில் சுமார் ஒரு வருட காலமாக இருந்து வருகிறார். அவரது ஒப்புதல் இல்லாமல் எந்த பெரிய டெண்டர்களும் நடைமுறைக்கு கொண்டு செல்ல முடியாது. மேலும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டின் படி கூடுதல் பணம் கொடுத்து இடம் கையகப்படுத்தப்பட்டது அமைச்சருக்கு தெரியுமா?. இந்த விவகாரத்தில் தலையிட்ட அந்த அதிகாரி தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை பிரசர் செய்து கூடுதல் பணம் கொடுத்து நிலத்தை கையகப்படுத்த சொன்னது உங்களுக்கு தெரியுமா?..
இப்படியாக மின்வாரியத்தின் செயல்படும் நடைமுறைகளை கருத்தில் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்?… பொறுப்புக்கு வந்த முதல் நாளிலேயே தலைமை அலுவலகம் சென்று குறிப்பிட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது ஏன்?.. இதுபோன்று பழிவாங்கும் நடவடிக்கைகளை புதிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் உயர் பொறுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் எங்களது கோரிக்கை என்று தெரிவிக்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.
