Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி

உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பஸ்பார் கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்பத் (65). இவருடைய மனைவி சுமித்ரா (60). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சுமித்ரா, கணவர் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தபோது, அவரை உள்ளே வைத்து பூட்டி, வீட்டுக்கு வெளியே இருந்து தீ வைத்து விட்டு தப்பி விட்டார். இதில், தீ வீடு முழுவதும் பரவியது.

இந்த சம்பவத்தில் ராம்பத் உடல் கருகி பலியாகி விட்டார். இந்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு முன்பும் கூட, கணவரை கொலை செய்ய சுமித்ரா முயன்றிருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. சுமித்ராவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

error: Content is protected !!