கரூர், ஆர்.டி மலை கிராமத்தில் 64-ம் ஆண்டாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார்: கரூர் மாவட்ட திமுக சார்பில் செந்தில் பாலாஜி வழங்க உள்ளார் என்று தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் ஆர்.டி மலை கிராமத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
64 ம் ஆண்டாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து அனுமதி கேட்டு இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்று உறுதி கூறியுள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து ஆலோசனை செய்த பிறகு எத்தனை மாடுகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ளலாம் என்று பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கரூர் மாவட்ட திமுக சார்பில் செந்தில் பாலாஜி முதல் பரிசாக கார் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

