Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாம்பை காப்பாற்றுங்கள்… கோவை பெண் புதிய முயற்சி…

கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர்கள், உமா மகேஸ்வரி, மற்றும் சஞ்சய் ஆகியோர் சுமார் 8 அடி நீளம் உள்ள சார பாம்பை லாபமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். முன்னதாக பிடித்த பாம்பை வைத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பாம்பு பிடி வீராங்கனை உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார்.

அதில் மனிதனிடமிருந்து பாம்பையும்,பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் எனவும், இந்த பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம் எனவும் உங்கள் பகுதியில் பாம்புகள் இருந்தால் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். பெண் பாம்பு பிடி வீராங்கனையின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!