தீயில் கருகி பெண் சாவு
திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (62)கடந்த 30 ந்தேதி ஷீலா தேவி வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவரது நைட்டியில் தற்செயலாக தீ பிடித்தது இந்த தீ சிறிது நேரத்தில் உடல் முழுவதும் வேகமாக பரவி பலத்த காயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சியாமளாதேவி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் திடீர் சாவு
திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (56).இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே டிஆர்எம் அலுவலகத்தில் ரெயில் என்ஜின் கட்டுப்பாட்டாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 ந்தேதி சங்கலிங்கம் பணியில் இருந்த போது அவரது உடல் முழுவதும் ஒரு சொறி ஏற்பட்டது. இதையடுத்து உடனே அவர் தனது நண்பர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்றார் அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று விட்டு பிறகு மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்பொழுது அவர் திடீரென்று மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கலிங்கம் இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மூச்சு திணறி ஒட்டல் தொழிலாளி சாவு
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் சாமிநாத நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவர் தனது மனைவியிடம் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் ஊழியராக சேர்ந்து பணிபுரிந்து வந்தார். கடந்த 30 ந்தேதி இரவு வீட்டில் வெங்கடேசனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை படுத்து அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஸ்வரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
திருச்சி புத்தூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையில் போலீசார் புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகில் சென்று பார்த்த பொழுது அங்கு மூன்று வாலிபர்கள் நின்றுகொண்டு போதை மாத்திரை விற்றுக் கொண்டு இருந்தனர். இதனை பார்த்த போலீசார் அந்த மூன்று பேரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை செய்த போது புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரகாஷ் (21) ஜெய நவீன் ராஜ் (22) ராஜபாண்டி (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார்3 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 26 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

