சேலம் அரிசிபாளையத்தில் பூசாரி ஒருவரின் வீட்டு மாடி தண்ணீர் தொட்டியில், பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை தொடர்பாக அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஒரு சமையல்காரர் உட்பட 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
