நாமக்கல் ராசிபுரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் பரணி என்பவரின் பிட்புல் நாயை பராமரிப்பதற்காக அவரது நண்பன் அறிவழகன் தனது வீட்டிற்கு கொண்டுவந்துள்ளார். இந்நிலையில், வாகன சத்தத்தால் ஆவேசமடைந்த நாய் அறிவழகனின் தாயார் கவிதாவை பல இடங்களில் கடித்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் கவிதாவை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், அந்த நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
