Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

சென்னை : தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அறிமுகமாகியுள்ள இளம் இயக்குநரும், தளபதி விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், தான் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் ரிலீசுக்காகத் தீவிரமான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அண்மையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், தனது சினிமா பயணம், தனது இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் திரையுலகில் தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவுடனான அனுபவங்கள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பேட்டியின் போது தமக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், யுவன் ஷங்கர் ராஜாவைத் தன் வாழ்வில் எப்போதுமே ஒரு பகுதியாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். தன் இயக்கத்தில் உருவாகும் ‘சிக்மா’ படத்தில் யுவன் ஷங்கருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயம் என்றும், இப்படத்திற்காக அவர் ஒரு பாடலைப் பாடியிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

யுவனைத் தனக்கு ஏன் மிகவும் பிடிக்கும் என்பதை விளக்கிய ஜேசன் சஞ்சய், அவர் தன்னை வெளிப்படுத்தும் விதம் மற்றும் பல புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு அவரது இசைதான் உயிராக இருந்துள்ளது ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மனிதர்களின் அனைத்து வகையான உணர்ச்சிகளையும் தன் இசையின் மூலம் பிரதிபலிக்கும் ஆற்றல் யுவனுக்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர், தனது சிறுவயது மற்றும் டீன் ஏஜ் காலங்கள் உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் யுவனின் பாடல்கள் தன்னுடன் பயணித்துள்ளதாகத் தெரிவித்தார். தான் எந்த மனநிலையில், அதாவது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது சோகமாகவோ, மன அழுத்தத்திலோ இருந்தாலும் சரி, அதற்கேற்ற யுவனின் பாடல்களைத் தேடிப் பிடித்துக் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜாவை நேரில் சந்தித்து பேசியபோது நடந்த சுவாரஸ்யமான தருணங்களையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டார். அவரை முதல்முறையாகப் பார்த்தபோது தான் சற்று திகைத்துப்போய் நின்றதாகவும், சந்திப்பின் தொடக்கத்தில் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் சுமார் ஐந்து நிமிடங்கள் மௌனமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

அந்த விசித்திரமான மௌனத்திற்குப் பிறகு, நலம் விசாரிப்புகளுடன் சுதாரித்துக்கொண்டு பேசத் தொடங்கியதாகத் தெரிவித்தார். குறிப்பாக, தற்போது சென்னையில் இருந்து விலகி துபாயில் வசித்து வரும் யுவனிடம், “உங்களுக்கு ஏன் சென்னையைப் பிடிக்கவில்லை? ஏன் சென்னைக்கெல்லாம் வருவதில்லை?” என்று உரிமையோடு அவரைச் சீண்டியும், கலாய்த்தும் பேசியதாகவும் ஜேசன் சஞ்சய் அந்தப் பேட்டியில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

error: Content is protected !!