Skip to content

பொள்ளாச்சியில் வந்து இறங்கிய கரும்பு-ரேசன் கடைக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

தமிழர் திருநாள் தை திருநாளாம் பொங்கல் விழாவை தித்திப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் 3000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி,சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க அறிவிப்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து நியாயவிலை கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது.மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள கரும்புகள்

விநியோகிக்கப்படுவதற்காக சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பொள்ளாச்சிக்கு லாரிகள் மூலம் கரும்பு கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.சுமார் லாரி ஒன்றிற்கு 500 கரும்புகள் என கட்டப்பட்டு, 25க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட கரும்புகள் பொள்ளாச்சி வந்தடைந்து, அதனை இறக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை வால்பாறை மற்றும் அடிவாரத்தில் உள்ள பழங்குடியின மக்கள்,அகதிகள்

முகாம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ள பகுதிகளுக்கும் கரும்புகள் சென்றடையும் வண்ணம் லாரிகளிலிருந்து சிறு குட்டி யானை வண்டிகள் மூலம் கரும்பு கட்டுகள்,
மலை பாங்கான இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. ரொக்க பரிசு வழங்கும் அதே நேரத்தில் கரும்புகள் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் வண்ணம் பணிகள் துரிதப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!