Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு எண்.62க்குட்பட்ட பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 574.38 ஏக்கர் நிலப்பரப்பில், 247.50 ஏக்கரில். தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 58.64 எம்எல்டி கொள்ளளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்த போது, சுத்திகரிப்பு செய்வதால், அதிகளவு இடம் பயன்படுத்த வேண்டியுள்ளதாலும், எதிர்வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, புதிய நவீன தொழில்நுட்ப முறையில் 100 எம் எல்டி கொள்ளளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அரசாணை நிலை அரசாணை எண். 54 நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள். 02.05.2023ல் ரூ.216.20 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இப்பணிக்கு கடன் மற்றும் மான்யம் பெறுவதற்கு திருத்தம் செய்து திருத்திய நிர்வாக அரசாணை எண். 36 நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள். 06.03.2024ல் ரூ.233.87 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேற்படி, இப்பணிக்கு 24.11.2023 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி நிப்ந்தனைகளின் படி தனியார் நிறுவனத்திற்கு 05.03.2024 அன்று வேலை ஏற்பு உத்திரவு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வார்டு எண்.1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16, 17,18,19,20,21,22, 23,24, 25,26,27,28,29,30, 31,32,33,34,35,36,37, 38,39,42, 43,44,48,49, 50,51,52,53,54,59 ஆக மொத்தம் 50 வார்டு மக்கள் பயன் பெறுவாகள் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.இத்திட்டம் 74 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.இத்திட்டம் ஜீன் 2026ல் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!