திருவாரூரில் லஞ்சப் புகாரில் கைதான அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசரணை நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருடைய உதவியாளராக இருந்தவர் லஞ்சம் வாங்கிய போது பிடிபட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகே கீழகாவாதுகுடி கிராமத்தை சேர்த்தவர் பாரதிதாசன். இவர் வீட்டுமனை ரசிது வாங்குவதற்காக திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாமிநாதனை நாடியிருக்கிறார் அப்போது வீட்டுமனை ரசிது வழங்குவதற்காக 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பாரதிதாசன் திருவாரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனிடம் கொடுப்பதற்காக பாரதிதாசன் சென்றுள்ளார் அப்போது அங்கு மறைத்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மற்றும் அவருடைய உதவியாளர் சுரேஷ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை செய்து வந்தனர்.
அப்போது கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சுரேஷ் குமார் 3 வது மடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமாக அரசு அலுவலர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றார்கள். இந்த தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு அலுவலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த விசாரணை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்தப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கருண் காரட் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையின் இறுதியில் வெளியாகும் அறிக்கையை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
