உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக திகழும் துபாயில், சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் 24 காரட் தங்கத்திலான உலகின் நீளமான நடைபாதை விரைவில் திறக்கப்படவுள்ளது. துபாயின் தெய்ரா பகுதியில் அமைந்துள்ள தங்க விற்பனை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த நடைபாதை, அடுத்த 2 மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், துபாயில் தங்கத்திலேயே நடைபாதை அமைக்கப்பட்டு வருவது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
துபாயில் உலகின் மிக நீளமான தங்க நடைபாதை விரைவில் திறப்பு
