Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவறான சிகிச்சை?..திருச்சியில் செவிலியர் மாணவி உயிரிழப்பு

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின்போது, தவறான சிகிச்சை அளித்ததால் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரும் சக செவிலியர்களும் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

​​புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு – கலைச்செல்வி தம்பதியினர். விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களது மகள் சீதாலட்சுமி (19). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.

​மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த

மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தேவைக்கு அதிகமாக மயக்க மருந்து?

இதனைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு மூக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்குத் தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவி சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து செவிலியர் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!