Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உனக்கு National Award கிடைக்கணும்..” ராதிகாவிடம் சொன்ன பாரதிராஜா

தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், ஆஸ்பத்திரியிலிருந்து வீடுதிரும்பி தற்போது உடல்நலம் தேறிவருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் தீவிரமாக நடித்து வந்த பாரதிராஜா, தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் அகால மரணத்திற்குப் பிறகு மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளானார். மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் முற்றிலுமாக முடங்கிப் போன அவர், சில மாதங்கள் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.

கடந்த டிசம்பர் இறுதியில் சென்னை திரும்பிய அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நிபுணர் குழுவின் கண்காணிப்பில் இருந்ததற்கு பின் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தாய் கிழவி திரைப்படத்தில் நடித்திருந்த பாரதிராஜாவின் சிஷ்யை ராதிகா, அவரை சேரில் சென்று பார்த்து வாழ்த்து பெற்றுள்ளார்.

பாரதிராஜாவால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதிகா, தாய் கிழவி படத்தில் நடித்ததற்குபின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ராதிகா நடிப்பில் வெளியாகி வெற்றித்திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘தாய்க்கிழவி’ திரைப்படத்தைப் பாரதிராஜா பார்த்துள்ளார். படத்தில் ராதிகாவின் எதார்த்தமான நடிப்பைக் கண்டு வியந்த பாரதிராஜா, ’உனக்கு தேசிய விருது கிடைக்கணும்’ அவரை பாராட்டினார்.

உடல்நலம் குன்றி காணப்படும் பாரதிராஜா…அன்போடு தேற்றிய தாய்க்கிழவி!#ThaaiKizhavi #Bharathiraja #Cloud7Media #DirectorBharathiraja pic.twitter.com/5e4hM3nWTH

— Cloud7Media (@cloud7mediaoffl) April 19, 2026
தனது ‘குரு’ கையால் ஆசி பெற்றதோடு, பாராட்டுக்களையும் பெற்றது குறித்து ராதிகா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் ராதிகாவைத் திரைத்துறைக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் இவர்களது குரு-சிஷ்யை உறவு திரையுலகினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!