பாபநாசம் அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமரமூர்த்தி
வயல்களில் மின் மோட்டார் களுக்கு செல்லக்கூடிய காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, சோமேஸ்வரபுரம் கிராமத்தில் அரியலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளையப்பாடி அமரமூர்த்திக்கு சொந்தமான விவசாய நிலங்கள்

உள்ளது. இவருடைய வயல்களில் விவசாய பயன்பாட்டிற்கு உள்ள மின்மோட்டார்களில் உள்ள காப்பர் ஒயர்களை இரவு நேரங்களில் அறுத்து திருடி கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து அரியலூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமரமூர்த்தி கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல் அறிவுறுத்தலின்படி கபிஸ்தலம் காவல்துறை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான

வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை விசாரித்ததில் சோமேஸ்வரபுரம் கிராமத்தில் ஆறுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டர்களுக்கு செல்லக்கூடிய காப்பர் ஒயர்களை திருடியது தெரிய வந்தது. அவரிடம் இருந்த இருசக்கர வாகனம், ஒயர்களை வெட்டுவதற்கு பயன்படுத்திய இரண்டு கொரடு, வயர்களை கொளுத்தி உருக்கிய 8 கிலோ

காப்பர் ஒயர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பாபநாசம் அருகே மட்டையாந்திடல் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் பாலமுருகன் வயது 22, என்பதும், அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறார் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
