நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய மீரான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். போலியான மருத்துவ சீட்டு தயாரித்து மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி போதைக்காக பயன்படுத்தியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளை வாங்கி போதைக்கு பயன்படுத்தியது அம்பலமானது. பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த வாலிபரிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியானது.
