Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டை காலி செய்யாததால் இளம் பெண் மீது தாக்குதல்- வழக்கு- திருச்சி க்ரைம்

வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி சசிகலா (40). இவர் சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெரு, வெங்கடேசன் மனைவி அகிலா (55 )என்பவருக்கு சொந்தமாக திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அகிலா, சசிகலாவிடம் வீட்டை காலி செய்ய கூறினார். பின்னர் இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அகிலா அவரைக் கெட்ட வார்த்தையால் திட்டி கையால் தாக்கியதாக கூறப்படுகிறது அதைத் தொடர்ந்து சசிகலா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அகிலா மீது கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராம்ஜி நகரில் கஞ்சாவுடன் பிடிபட்ட இளம் பெண்

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் ஒரு இளம் பெண் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஜேக்கப் அங்கு விரைந்து சென்று
அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த புங்கனூர் மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மனைவி சரிகா வயது 28 என்பவரை கைது செய்தார் அவரிடம் இருந்து 60 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது மேலும் இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!