Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவோ கூறப்படும் அந்தப் பெண், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. முகத்தில் காயங்களோடு இருக்கும் வீடியோவையும் வௌியிட்டுள்ளார் அப்பெண். பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த வரதட்சணை கொடுமை அல்லது குடும்பத் தகராறுதான் தற்கொலைக்குக் காரணம் என்றும் பெண்ணின் வீட்டார் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!