உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரின் ஷாபூர் பகுதியில் உள்ள ‘சம்யாதி உட்கர்ஷ்டம்’ நிதி நிறுவனத்தில், நிங்கி என்ற 20 வயது இளம்பெண் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை தனது மகளைத் தேடிச் சென்ற தாயார் விமலா தேவி, உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை, நிதி நிறுவன இயக்குனர் சூரஜ் யாதவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நிதி நிறுவன அலுவலகத்தில் இளம்பெண் தற்கொலை
