தோழி திருமணத்துக்கு சென்ற இளம் பெண் மாயம்
கரூர் மாவட்டம், குளித்தலை செப்பாலப்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் யோகா (23.) இவர்கள் தற்போது திருச்சி இ பி ரோடு வேதாத்திரி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.சம்பவத்தன்று யோகா மதுரையில் உள்ள தனது தோழி திருமணத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து அவரது தாயார் அமுதா கோட்டை போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காப்பர் வயர்கள் திருடிய 2 பேர் கைது
திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 31 காப்பர் டியூப் களை மரம் நபர்கள் திருடி சென்று விட்டனர் இதுகுறித்து அந்த கல்லூரியின் ஆய்வக உதவியாளர் ரெக்ஸ் ஜான்சன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் பின்னர் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ( 28 ) அம்மா மண்டபம் புது தெரு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (26) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் பின்னர் நடத்தப்பட்ட மேல் விசாரணையில் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டல், தனியார் வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மருத்துவமனை, பேக் கடை உள்ளிட்ட ஐந்து இடங்களில் மொத்தம் 120 மீட்டர் காப்பர் டியூப்களை அவர்கள் திருடியது தெரிய வந்தது அதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மது குடிக்க தந்தை பணம் தர மறுத்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர்
சக்திவேல் இவரது இளைய மகன் கங்காதரன் (27) மதுவுக்கு அடிமையான இந்த வாலிபர் எந்த வேலைக்கு செல்லாமல் ஊர் சுத்தி வந்தார் அடிக்கடி பெற்றோரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார் நேற்று மது போதையில் வீடு திரும்பிய அவர் மீண்டும் தந்தை சக்திவேல் மற்றும் அண்ணன் பிரபாகரனிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார் ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்தனர் . இதனால் மனம் உடைந்த கங்காதரன் யாரும் எதிர்பாராத வகையில் டீசலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் பின்னர் உடல் முழுவதும் விந்து கதறி துடித்த அவரை தந்தை சக்திவேல் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கங்காதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷம் குடித்து பெண் தற்கொலை
திருச்சி திருவானைக்காவல் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மனைவி சாவித்திரி வயது 53.
இவருக்கு சற்று மனதில் பாதிப்பு இருந்தது இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து முடித்து மயங்கி விழுந்தார் உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சாவித்திரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர் இது குறித்து அவரது
மகன் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
