Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயிண்டர் உயிரிழப்பு

திருச்சி செந்தணீர்ப்புரம் திரு வி க நகரைச் சேர்ந்தவர் வடிவழகன் (32) பெயிண்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இவரது மனைவி நித்யா (35) வடிவழகன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் வடிவழகன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருந்தார் இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவர் எந்த அசைவும் இன்றி கிடப்பதாக வித்யாவிடம் தெரிவித்தனர் அவரை திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்தது தெரியாது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை

திருச்சி கீழ சிந்தாமணி பதுவை நகரை சேர்ந்தவர் எமரசன் (37) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார் இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது மன உளைச்சலில் இருந்து வந்த எமரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விபத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் சாவு

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று இரண்டு வாலிபர்கள் டூவீலரில் சென்றனர் அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது இதில் இரண்டு வாலிபர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர் வண்டி ஓட்டி வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு வாலிபர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இறந்த வாலிபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி பாலக்கரை ரயில்வே குடியிருப்பு அருகே தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி போதை மாத்திரை விற்ற திருச்சி பாலக்கரை காஜா பேட்டைபகுதியைச் சேர்ந்த முகமது செல்லார் ஷா 23 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்துரூபாய் 8500 மதிப்புள்ள 28 போதை மாத்திரைகள் ஒரு மருத்துவ ஊசி மற்றும் ஒரு வாட்டர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!