Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவு- வாலிபர் குண்டாசில் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவு- வாலிபர் குண்டாசில் கைது

தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22) என்பவர், தனது நண்பர்களான அமுதா நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23) மற்றும் சுடலை காலனியைச் சேர்ந்த குரு (21) ஆகியோருடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அப்போது அவர்கள் நாட்டு வெடிகுண்டை உருவாக்கி, அதனைத் திறந்தவெளியில் வெடிக்க வைத்து வீடியோ எடுத்துள்ளனர். மேலும், அந்த வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பொதுமக்களுக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அலெக்ஸைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனுக்குப் பரிந்துரை செய்தார்.

காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, அலெக்ஸைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸிடம், குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையிலடைப்பதற்கான உத்தரவின் நகல்கள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!