Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

வாலிபரை தாக்கி கடத்தி 3 பவுன் நகை பணம் பறிப்பு

திருச்சி திருவரங்கம் அல்லித்துரை,வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத் ரோடு பகுதியில் தனது இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த மூன்று மர்ம ஆசாமிகள் சந்தோஷ்யிடம் தகராறில் ஈடுபட்டு திட்டி பணம் கேட்டார்.பணம் கொடுக்க சந்தோஷ் மறுத்தத்தை தொடர்ந்து அவரை மர்ம ஆசாமிகள் 3 பேரும் மிரட்டி அவருடைய இருசக்கர வாகனத்தில் கடத்தி கொண்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள உப்பனூருக்கு
அழைத்துச் சென்றுசந்தோஷை மிரட்டி அவருடைய ஜிபே மூலம் ரூ 35 ஆயிரம் பணத்தை மிரட்டி வாங்கிக்கொண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த
சந்தோஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தாக்கி நகை பணத்தை பருத்தி சென்ற வர்ம ஆசாமிகளை வலை விசி தேடி வருகின்றனர்.

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கோமளவள்ளி (வயது 63)இவர் நேற்று வீட்டில் விளக்கை பற்ற வைத்த போது திடீரென்று அவரது சேலையில் தீ பிடித்தது. இந்த தீ திடீரென அவரது உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் கோமளவள்ளி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று
கோமளவள்ளி
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது

திருச்சி ஏப் 3- திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கீழ சிந்தாமணி பகுதியில் சென்று பார்த்தபொழுது அங்கு போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த காட்டூர் பகுதி சேர்ந்த நஸ்ருதீன் (வயது 27) காந்திபுரத்தை சேர்ந்த காட்டூர் பகுதியில் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 27) அரியமங்கலம் பகுதியை சேர்ந்த உசேன் பாஷா (வயது 21), கள்ளர் தெருவை சேர்ந்த சூர்யா (வயது 22) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!