Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே, 20 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதோடு, குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அந்த இளைஞர் புதைக்கப்பட்ட இடம் தெரியவந்தது.  குழிதோண்டி புதைக்கப்பட்ட உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவகனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து, தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!