Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..

திருச்சி மேல சிந்தாமணி எஸ் கே நகரை சேர்ந்தவர் சங்கர் (39) இவர் திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சங்கருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் சங்கர் மன உளைச்சலில் இருந்தால் கடந்த 29ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து சங்கரை ஆபத்தான நிலையில் அவரது குடும்பத்தினர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!