Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

திருச்சி ஜாபர்ஷா தெரு கோரி குளம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவரது மகன் பாரதி (32). இவர் திருமணம் ஆகாதவர் பெரிய கம்மாள தெருவில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 7 ந்தேதி வீட்டில் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் அமர்ந்து இருந்த பாரதி திடீரென்று மேலே இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் பாரதி இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பாரதியின் தாய் ராணி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!