மேற்கு வங்காளத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் விஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று (செப்.18) மாலை போட்டியின்போது திடீரென மழையுடன் மின்னல் தாக்கியது. இதனால் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
