ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை, யூடியூபர் ஜைத் மெஹ்தி 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மில்க்ஷேக் வழங்கிய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சாலையில் சந்தித்த அந்த ஊழியரிடம் பேசிய ஜைத் மெஹ்தி, தன்னுடன் ஹோட்டலுக்கு வந்து மில்க்ஷேக் அருந்த அழைத்துள்ளார். எதிர்பாராத அழைப்பால் ஆச்சரியமடைந்த ஊழியரும் அவருடன் சென்றார். ஹோட்டலின் பிரமாண்டத்தை பார்த்து அவர் வியந்த நிலையில், இருவரும் ஒன்றாக அமர்ந்து மில்க்ஷேக் அருந்தினர்.
ஸ்விக்கி ஊழியருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யூடியூபர்
