குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 148தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. அதே நேரம் ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டியிட்டார். ஆரம்பத்தில் அவர் அங்கு 3 ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆம்ஆத்மி முதலிடத்திலும், காங்கிரஸ் 2ம் இடத்திலும் இருந்தது.
10 மணி அளவில் ரிவாபா அதிக ஓட்டுகள் பெற்று முன்னணிக்கு வந்தார். தொடர்ந்து அங்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது.